திரவ ஓட்டத்தில் அமளிக்கு காரணம் விஸ்காசிட்டி, அதாவது பாகுநிலையின் வீரியத்தில் உள்ளது என்றும், அமளி ஓட்டம் என்பது பல சைஸ் சுழல்களால் ஆனது என்றும் மூன்றாவது பாகத்தில் பார்த்தோம். பல சைஸ்களில் ஓடும் சுழல்களின் ஊடே திரவ ஓட்டத்தின் இயக்க ஆற்றல் பெரியசுழலில் இருந்து சிறியவைகளுக்கு தொடர்ந்து மாற்றலாகி, இறுதியில் மாலிக்கியூலர் லெவலில் அளக்கமுடியாத வெப்பமாக மாறி விரயமாகிவிடுகிறது. அமளியாக ஓட்டம் இருப்பதற்கு அதனால் நாம் தொடர்ந்து ஆற்றலை ஊட்டிக்கொண்டே இருக்கவேண்டும், குழாயாக இருந்தால், மோட்டார் பம்பின் மூலம்.
சரி, இவ்வாறு தொட்ட இடத்திலெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் வேகங்களை கொண்ட அமளிஓட்டத்தை எப்படி அறுதி இடுவது? இந்த வேகங்களை அளக்க முடியாதா? இதை வைத்து அமளி எங்கு எப்படி நிகழும் என்று அறியமுடியாதா? இயற்கையை புரிந்துகொள்ள இயற்பியல் துறையில் பிற இடங்களில் அணுகுவதைபோல கணித-மாதிரிகளை கொண்டு இந்த அமளியை விளக்க, அனுமானிக்க, கட்டுப்படுத்த முடியாதா? அனைத்து கேள்விகளுக்கும் பதில், ஓரளவு முடியும் என்பதே.
இதில் இளக்காரம் இல்லை.
read more…
திரவங்கள், பாய்மங்களின் டர்புலன்ஸ் என்றால் இக்கட்டுரைத்தொடரில் அமளி என்று வைத்துள்ளோம். சில உதாரணங்களை ஏற்கனவே பார்த்தோம். லாமினர் அல்லது தகடொத்த ஓட்டம் எனும் திரவங்களின் சீரோட்டத்தில் இருந்து அமளி ஓட்டம் எவ்வகையில் மாறுபடுகிறது என்றும் பார்த்தோம்.தொடர்ச்சியாக, ஏன் அமளி ஓட்டத்தில் வேகம் எங்கு அளந்தாலும் ஒரு நிலையிலில்லாமல், ஏறியிறங்கிக்கொண்டே இருக்கும் என்று யோசிப்போம்.
அதற்கு முன் அமளியின் மற்றொரு தினவாழ்க்கை உதாரணம். ஹேர் டிரையர்.
read more…
டர்புலன்ஸ் என்றால் அமளி என்று, பெயர்க்காரணத்தை சென்ற பாகத்தில் கூறி, இவ்வறிமுக கட்டுரையில் வைத்துள்ளோம். அமளியின் உதாரணங்கள் சென்ற பாகத்தில் பார்த்தோம். டர்புலண்ட் ஃப்ளோ என்றால் திரவங்களின் அமளி ஓட்டம். மாறாக சீரோட்டம் அல்லது தகடொத்த திரவங்களின் ஓட்டமும் நிகழும்.
மேலே படத்தில் லியனார்டோ டா வின்சி கவனித்து வரைந்துள்ளது தினவாழ்வில் நாம் குழாயிலோ, கால்வாயிலோ பார்க்கும் தண்ணீரோட்டம்தான். அமளி ஓட்டம்.
read more…
டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரித்ததும் மனக்கண்முன் பல குழப்பங்கள் படமாகத் வந்துபோகலாம் – நுரைபொங்கும் காவிரி, அலைமோதும் கடல், சுழன்றடிக்கும் புயல், நிசப்த நட்சத்திர வெடிப்பு, கலர் நொடிக் கனவுகள், வளையல் குலுங்கும் கலிடாஸ்கோப், பனகல் பார்க் டிராஃபிக், தட்டாமாலை இப்படி. டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு குழப்பம் என்று பொருள்கொள்ளலாம்தானே.
ஆனால் அறிவியலில், குறிப்பாக இயற்பியலின் ஒரு பகுதியாக நாம் வகுத்திருக்கும் திரவ-இயற்பியலில், டர்புலன்ஸ் என்றால் வேறு. சற்று ஆர்கனைஸ்டு குழப்பம்.
இந்த விஷயத்தை பற்றிய ஆராய்ச்சி பல நூற்றாண்டுகளாக இன்றும் தொடருகிறது. இப்பவும் குன்சாகத்தான் புரிகிறது. இந்த தொடர் கட்டுரைகளில் டர்புலன்ஸ் என்றால் விஞ்ஞானிகள் எதைக்குறிப்பிடுகின்றனர், அதன் புதிர்கள் என்ன, அதை ஆராய்வதில் என்ன பலன்கள், இதனால் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை தீருமா என்று சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்வோம்.
read more…
மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். வானியல் அறிஞர் டைகோ பிராஹேவாக இருந்தால், பேச்சுவார்த்தை முற்றுகையில் மூக்கை கழட்டி பாலிஷ்செய்து எதிரியின் கவனத்தை கலைக்கலாம். அவருக்கு இளவயதில் கத்திச்சண்டையில் மூக்கு அறுபட்டு, பிறகு பொய் மூக்கு பொருத்தப்பட்டதாம். நம்ம தேவனின் துப்பறியும் சாம்புவாக இருந்தால், மூக்கை நீவிவிட்டுக்கொள்ளலாம். ஏதாவது துப்பு உதிக்கும். அநேகமாக தவறாக இருக்கும். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin – இதை ’இட்டின்ட்டின்’ என்று எழுதுவதாக இல்லை) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய நேரிடலாம்.
மூக்கு வாய் இரண்டும் ஒருங்கே தன் பெரிய அலகில் கொண்டுள்ள டௌகன் பறவையாக இருந்தால்?
இது என்ன கேள்வி. பெரிய அலகை வைத்து தன் உடல் சூட்டை தணித்துக்கொள்ளும். ஜீலை 2009 சயின்ஸ் ஆராய்ச்சி சஞ்சிகையில்கூட புரஃபசர் டாட்டர்ஸால் அட்டகாசமாக வீடியோவுடன் விவரித்து இதைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளதே, பார்க்கவில்லையா நீங்கள் என்கிறீர்களா. பார்த்துவிடுவோம்.
read more…
சார்ல்ஸ் டார்வின், பீகிள் என்ற கப்பலில் ஏறி தென் அமெரிக்கக் கண்டத்தில் பல இடங்களில் கண்ட தாவரங்களும் விலங்குகளும்தான் அவர் பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வு ஆகிய கொள்கைகளை வரையறுக்க முக்கியக் காரணமாக இருந்தன என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.
தென்னமெரிக்காவில் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தது காலாபகஸ் தீவுகள் (Galápagos Islands). இவை எரிமலைக் குழம்பு கெட்டிப்படுவதால் புதிதாக உருவான தீவுப் பாறைகள். இந்தத் தீவுகள் அருகில் இருக்கும் ஈக்வடார் நிலப்பரப்பிலிருந்து சுமார் 1,000 கிமீ தள்ளி உள்ளன. அதனால் அகஸ்மாத்தாக அங்கு வந்து சேர்ந்த பறவைகள், நில விலங்குகள் ஆகியவையே அங்கு வசிக்க முடியும். ஆனால் அந்தத் தீவுகளில் காணப்பட்ட பல பறவைகள், விலங்குகள் டார்வினை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பலவிதமான கானப்பறவைகள் (Finch), வித்தியாசமான ஓடுகளைக் கொண்ட ராட்சச ஆமைகள், முற்றிலும் புதுமையான இகுவானா பல்லிகள் (நீரில் நீந்தக்கூடிய வகையும் உண்டு) என்று இங்குள்ள ஒவ்வொரு குட்டித் தீவிலும் முற்றிலும் புதிய, முற்றிலும் வித்தியாசமான உயிர் வகைகள் இருந்தன.
read more…
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நன்மக்கள் கூறுவர். டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் இல்லாத ஊரில் எட்டடுக்கு செங்குத்து தெருவில் ஒரு பிளாட்டிலும் குடிபோக வேண்டாம் என்று சமகால பொதுமக்கள் அறிவுருத்துவர். டாஸ்மாக் இல்லாத ஊரில் அருந்தும் பழக்கம் வேண்டாம் (கட்டுப்படியாகாது) என்று குடிமக்கள் சொல்வதாக கேள்வி. சரி மேட்டருக்கு வருவோம்.
புதிதாக கடை போட்டு, அதில் லாபம் கொழிக்க வேண்டும் என்றால், எந்த இடம் தோதாக வரும்? முன்கூட்டியே நிர்ணயிக்கமுடியுமா?
தேசத்திலோ, மாநிலத்திலோ, மக்கள்தொகை அடர்த்தி குறைவாக இருக்கும் பகுதியில் தொடங்கினால் நிச்சயம் எல்லோரும் கடையை உபயோகிப்பர் என்று ஊகிக்கலாம். ஆனால், மக்கள்தொகை அதிகமாக இருக்கும் பகுதியில் தொடங்கினால், தன்னிச்சையாக கடைக்கு ஜனநடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், லாபம் அதிகம் வருவது நிச்சயம் என்றும் தோன்றுகிறதே. எது சரி?
இந்தப் பிரபஞ்சத்தில் 95% “விஷயங்கள்” என்ன என்றே நமக்குத் தெரியாதாமே? நமக்குத் தெரிந்திருக்கும் ‘பொருள்’, ‘ஆற்றல்’ ஆகியவை வெறும் 5% என்றால், நமக்குத் தெரியாத இந்த ‘இருள் பொருள்’, ‘இருள் ஆற்றல்’ ஆகியவை எப்படிப்பட்டவை? அப்படி நிஜமாகவே இருக்கிறதா?
விஞ்ஞான் பிரசார் என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் முனைவர் த.வி.வெங்கடேசுவரன், இந்தத் தலைப்பில் நேற்று (26 செப்டெம்பர் 2009) பேசியதன் ஒளியும் ஒலியும்:
Watch Dark Matter, Dark Energy (1/2) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
Watch Dark Matter, Dark Energy (2/2) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
சிறுவயதில் கமர்கட்டோ, இலந்தைவடையோ கையூட்டாக பெற்று, அம்மாவிற்காக பக்கத்து கடைவரை சென்று மாவு அரைத்து வந்ததுண்டா? மாவுமெஷின் கடையில் மோட்டாரிலிருந்து மாவரைக்கும் ஜகடையை இணைக்கும் கன்வேயர் பெல்ட்டை பார்த்திருக்கிறீர்களா? என்றால், நான் இங்கு எழுதப்போகும் வஸ்துவுடன் உங்களுக்கு பரிச்சயம் இருக்கும்.
இதுவரை இவ்வகை வீடுபேற்றில் திளைத்தெழுந்ததில்லையெனில், வீட்டிற்கருகே மாவுமெஷின்கடை இருந்தால் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து தொடர்ந்து படியுங்கள். அதற்கும் முடியாமல் வீட்டைச்சுற்றி பொட்டல் காடாய் புலம்பெயர்ந்திருப்பவர்களுக்கு, இடம், பொருள், ஏவல், தவிடு சூழ நான் குறிப்பிடும் மாவுமெஷின், அருகில் படத்தில் காட்டியுள்ளதுபோல இருக்கும்.
வெட்டி எடுக்கப்பட்ட ஐஸை கோணிப்பையில் சுற்றி, அதன்மீது பைன் மரத்தூளைத் தூவி வைத்தால் ஐஸ் உருகாமல் (அதாவது அதிகம் உருகாமல்) இருப்பதாகக் கண்டுபிடித்தார் ஃபிரெடெரிக் டியூடர். அதற்கான ஐடியாவை அவருக்குக் கொடுத்தது அவரது நண்பர் என்று சொல்லப்படுகிறது.
மரத்தூள், அரிசித் தவிடு ஆகியவை வெப்பம் கடத்தாத இன்சுலேட்டர்கள். அதன் காரணமாக பனி கொஞ்சமாகத்தான் உருகியது. இந்தியாவுக்கு அவர்கள் முதலில் அனுப்பிய 180 டன் ஐஸில், 100 டன் பத்திரமாக வந்துசேர்ந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
ஒருவகையில் ஐஸே ஒரு வெப்பம் கடத்தாப் பொருள்தான். அதனால் ஐஸின் புறப்பகுதி லேசாக உருக ஆரம்பித்தாலும் அங்கிருந்து வெப்பம் சட் சட்டென்று பரவி உள்ளுக்குள் சென்றுவிடாது.
டியூடர் இந்தியாவுக்கு ஐஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துப் பல வருடங்களுக்குப் பின்னரே தெர்மகோல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதுவும் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து பெட்டிகள் எல்லாம் செய்யப்பட்டன.
தெர்மோஸ் ஃபிளாஸ்க் எனப்படும் வெற்றிட ஃபிளாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டபோது டியூடரின் கம்பெனியே போண்டி ஆகிவிட்டது.
(தொடரும்)



